About Us

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
- திருக்குறள் (944)
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப
உணவோடு நலம் காண்போம்!
நான் அங்குலட்சுமி தேவராயன் (M.Com,MPhil,B.Ed,
பெண் தொழில் முனைவோர்) சமீபத்தில் ஒரு கவிதைப் படித்தேன். பொருளிலே கலப்படம்
அதை மறைக்க
விளம்பரக்
கலர்ப் படம்!
எல்லாம் போலியாய் மாறிக் கொண்டிருப்பதை இக்கவிதையின் வழி நாம் உணரலாம். தரமான சுத்தமான பொருட்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
“வீட்டு சமையல் அறையில் இருக்கிறது குடும்பத்தின் ஆரோக்கியம்” என்ற கூற்று என்னுள் ஏற்படுத்திய தேடலே வளம் அங்காடிக்கான விதை!
45 ஆண்டுகாலம் உணவுப் பொருட்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுகொண்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றேன் நான். சமைக்கத் தேவையான மூலப்பொருட்கள் அனைத்திலும் கலப்படம் செய்து மனிதன் நிறைவில் என்ன சுகத்தை கண்டுவிட முடியும்?
பேராசை இல்லா வாழ்வு ,போதும் என்ற பக்குவம், இந்த இரண்டு கறைகளுக்குள் மனித வாழ்க்கை ஓடும் போது, தானாகவே அமைந்துவிடும் எல்லோருக்குமான நல்வாழ்வு!
வளம் அங்காடி பேராசையில்லாமல், நம் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நோக்கில் என்னால் தொடங்கப்பட்டுள்ளது. பொருள் ஈட்டுவது நோக்கமாக இருப்பினும் அதன் மூலம் சமூகத்திற்கு ஆரோக்கியம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் வளம் அங்காடியின் இலக்கு!
சுருங்கச் சொல்லின் சுயநலத்தை பொதுநலமாக மாற்றித் தரும் சமூக அக்கறை!
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய உணவு முறைகளை, உணவுப் பொருட்களை நேரடியாக விளையும் இடத்திலேயே விவசாயிகளிடமிருந்து வாங்கி, விற்பனை செய்வது எங்கள் திட்டமாக உள்ளது.
காலத்திற்கு ஏற்ப விளையும் உணவுப் பொருட்களை காலம் தாழ்த்தாது உங்கள் வாசலுக்கே ஆன்லைனில் வரவழைக்கும் எங்கள் முயற்சி, உங்கள் இல்லத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி!

முதற்கட்டமாக 100% தரமான,
சமையல் நறுமணப் பொருட்கள்
(சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய்... முதலியன)
உலர் பழங்கள்
(முந்திரி, பாதாம், திராட்சை..முதலியன)
பூஜை பொருட்கள்
(வேதிப்பொருட்கள் கலப்பில்லா சூடம், இயற்கை சாம்பிராணி, வேப்ப எண்ணெய், காட்டன் பஞ்சுத்திரி... முதலியன)
பூஜை பொருட்கள்
(வேதிப்பொருட்கள் கலப்பில்லா சூடம், இயற்கை சாம்பிராணி, வேப்ப எண்ணெய், காட்டன் பஞ்சுத்திரி... முதலியன)
குளியல் மஞ்சள், கல்லுடன்
(பாரம்பரிய மஞ்சள் தேய்ப்பு முறை)
கடலை மிட்டாய்
முதலிய பொருட்களை சுத்தமாகவும் தரமாகவும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்!
சுற்றுச்சூழல் நலன் கருதி நெகிழிப்பைகள்(பிளாஸ்டிக்) பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்து வழங்குகிறோம். தவிர்க்க இயலா சூழலில் எங்களிடம் வாங்கும் நெகிழிப்பைகளை, எங்களிடமே திருப்பிக் கொடுத்து அதற்கேற்ற சன்மானம் பெரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!
ஆரோக்கியம் பெருக!
ஆதரவு தருக!
உணவோடு நலம் காண்போம்!
நிறுவனர்,
வளம் அங்காடி.